நினைவிருக்கா...?

பாகம் – 3 👁️

"மாயா... ஓடு..."

அந்த வார்த்தை மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

ஆனால்...

அது யாருடைய குரல்?

ஏன் அவளை ஓடச் சொல்கிறது?

எதுவும் அவளுக்கு நினைவுக்கு வரவில்லை.

தலையைப் பிடித்தபடி ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள் மாயா.

அதே நேரம்...

நகரின் மறுபக்கத்தில் இருந்த ஒரு இருண்ட அறை.

வியர்வையில் நனைந்தபடி குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்தான் அர்ஜுன்.

அவனின் ஒவ்வொரு குத்திலும் கோபம் தெரிந்தது.

அப்போது அவனின் PA உள்ளே வந்தான்.

கையிலிருந்த க்ளவ்ஸை கழற்றியபடி சோஃபாவில் அமர்ந்த அர்ஜுன்,

"ராதிகாவைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா?"

என்று கோபமாகக் கேட்டான்.

அவனின் பார்வையைப் பார்த்ததும் PA சற்று பதறினான்.

"அர்ஜுன் சார்... மேடத்தை எல்லா இடத்திலும் தேடிக்கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக கண்டுபிடித்துவிடலாம்..."

என்று மெதுவாகக் கூறினான்.

அதை கேட்ட அர்ஜுன் எதுவும் பேசாமல் கோபமாக அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

சில நிமிடங்கள் கழித்து...

PA-வின் மொபைல் ஒலித்தது.

அவன் உடனே அழைப்பை ஏற்றான்.

"இப்போ எதற்கு கால் பண்ணுறீங்க? அர்ஜுன் சார் இப்போதான் கோபமாக வெளியே போனார்..."

என்று அவசரமாகச் சொன்னான்.

சில நொடிகள் அமைதி.

பிறகு மெதுவாக,

"நீங்க அங்க பாதுகாப்பாக இருக்கீங்களா?"

"யாருக்கும் எந்த சந்தேகமும் வரலையா?"

என்று கேட்டான்.

மறுமுனையில் என்ன பதில் வந்ததோ தெரியவில்லை.

"சரி... பிறகு பேசுறேன். இப்போ அர்ஜுன் சாரை சமாளிக்கணும்."

என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அவன் அறையை விட்டு வெளியேறினான்.

ஆனால்...

அந்த உரையாடலை முழுவதுமாக ஒளிந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தவன்...

அர்ஜுன்!

நிழலிலிருந்து வெளியே வந்த அவன் முகத்தில் கோபம் இல்லை.

ஒரு வலி மட்டும் இருந்தது.

காரில் அமர்ந்தவன் தனது பணப்பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்தான்.

அதில் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் ராதிகா.

புகைப்படத்தை பார்த்தபடி அவன் மனதில் கேட்டுக்கொண்டான்.

"இது என்ன விளையாட்டு, ராதிகா?"

அதே நேரம்...

மாயா தனது கையில் இருந்த மொபைலை அணைத்தாள்.

அதை அறையின் அலமாரிக்குள் மறைத்து வைத்தாள்.

பிறகு மெதுவாக ஜன்னலருகே சென்று நின்றாள்.

வெளியே தெரிந்த இருளை பார்த்தபடி

மெல்ல உதடுகள் அசைந்தன.

"சாரி... அர்ஜுன்..."

என்று முணுமுணுத்தவள்,

ஜன்னல் கண்ணாடியில் தெரிந்த தனது பிரதிபலிப்பை ஒரு நொடி பார்த்தாள்.

அடுத்த நொடி...

அவளது உதடுகளில் புரியாத ஒரு புன்னகை.

அது மாயாவின் புன்னகையா...

இல்லை ராதிகாவினுடையதா?




தொடரும்... 👁️🔥

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

“நினைவிருக்கா..?

நினைவருக்கா...?