காலை விடிந்தது...

மெதுவாகக் கண்விழித்தாள் அவள். சில நொடிகள் மாடியை வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தவள், பின்னர் சோம்பல் முறித்தபடி எழுந்து அமர்ந்தாள்.

அப்போது கதவில் மெதுவான தட்டும் சத்தம் கேட்டது.

“உள்ளே வரலாமா?”

வயதானவரின் குரல்.

“வாங்க uncle...” என்று புன்னகையுடன் கூறினாள்.

கதவைத் திறந்து உள்ளே வந்தவர் அவளை கவனமாகப் பார்த்தார்.

“இன்று hospital போக appointment போட்டிருக்கேன். நம்ம போயிட்டு வரலாம்.”

அவள் மெதுவாகச் சிரித்தாள்.

“Uncle, இப்போ நான் நல்லாத்தான் இருக்கேன். Just normal check-up தானே? நான் போயிட்டு வர்றேன்.”

அவரின் முகத்தில் தயக்கம் தெரிந்தது.

தனியாக அனுப்ப மனம் இல்லாவிட்டாலும், இறுதியில் அரை மனதோடு சம்மதித்தார்.

“சரி... கவனமா போயிட்டு வா.”

“Okay uncle.”

அவள் அறையிலிருந்து வெளியேறியதும், அவரது முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.

மொபைலை எடுத்தவர் வேகமாக ஒரு எண்ணை அழைத்தார்.

“அவள் hospital போறா... தனியா...”

அவ்வளவுதான்.

மறுமுனையில் இருந்தவர் ஏதோ கூறுவதற்குள் call-ஐ துண்டித்துவிட்டார்.


காலை உணவை முடித்தவள், தனது hospital file-ஐ எடுத்துக்கொண்டு காரில் ஏறினாள்.

சில நிமிடங்களில் hospital-ஐ அடைந்தாள்.

Doctor அறைக்குள் நுழைந்தவள், எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அவளைப் பார்த்த doctor புன்னகைத்தார்.

“வாங்க Radhika... எப்படி இருக்கீங்க?”

“Fine doctor...”

சில நொடிகள் அமைதிக்குப் பிறகு,

“Report யாருக்கு கொடுக்கணுமோ அவர்களுக்குக் கொடுத்துடுங்க.”

Doctor மெதுவாகத் தலையசைத்தார்.

“முதல்ல... பார்க்கப் போகலாமா?”

அந்தக் கேள்வி கேட்டவுடன் அவளின் கண்களில் சோகம் தெரிந்தது.

மெதுவாகத் தலையசைத்தாள்.

Doctor தனது அறையின் பின்புறத்தில் இருந்த ஒரு மறைவு கதவைத் திறந்தார்.

இருவரும் அந்த இரகசிய பாதையில் நடந்து சென்றனர்.

சில நிமிடங்களில், பல பாதுகாப்பு அமைப்புகள் சூழ்ந்திருந்த ஒரு தனி அறையை அடைந்தனர்.

அறைக்குள் நுழைந்த ராதிகாவின் பார்வை நேராக அந்த படுக்கையை நோக்கிச் சென்றது.

பல wires...

தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த monitors...

உயிர் இருப்பதை மட்டுமே காட்டிக்கொண்டிருந்த இயந்திரங்கள்...

ஆனால்...

படுக்கையில் படுத்திருந்தவளிடம் எந்த அசைவும் இல்லை.

அவளைப் பார்த்த ராதிகாவின் கண்கள் கலங்கின.

“உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த யாரையும் சும்மா விட மாட்டேன், Maya...”

அவளின் குரல் நடுங்கியது.

“விடமாட்டோம்.”

பின்னால் இருந்து இரண்டு குரல்கள் ஒன்றாக ஒலித்தன.

திரும்பிப் பார்த்தாள்.

அங்கு doctor மற்றும் அர்ஜுனின் PA நின்றுகொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்தவள் மெதுவாகச் சிரித்தாள்.

மூவரும் கண்ணாடி சுவரின் வழியாக Maya-வை பார்த்தனர்.

அறை முழுவதும் அமைதி நிலவியது.

அந்த அமைதியை உடைத்தது monitor-இன் தொடர்ச்சியான beep... beep... சத்தம் மட்டுமே.

ஆனால்...

அவர்களுக்குத் தெரியாமல்...

Maya-வின் வலது கையின் விரல்...

மிக மிகச் சிறிதாக அசைந்தது...!


தொடரும் . . . .