நினைவருக்கா...?
பாகம் – 2 👁️
“மீண்டும் அதே கனவா…?”
அவள் அருகில் அமர்ந்திருந்த வயதானவர் மெதுவாகக் கேட்டார்.
அவரின் குரலில் கவலை தெரிந்தது.
அதை உணர்ந்தவள், “அப்படி லாம் ஒன்றும் இல்லை uncle…” என்று மெல்லிய சிரிப்புடன் கூறினாள்.
ஆனால் அந்த சிரிப்பு… அவள் கண்களில் எட்டவே இல்லை.
அந்த வயதானவர் கையில் இருந்த மாத்திரை மற்றும் மருந்தைக் கண்டவுடன், அவள் முகம் சுளிந்தது.
“Uncle… இதுக்கு முடிவே இல்லையா?”
அவள் சோர்வாகக் கேட்டாள்.
அந்த பெரியவர் சிறிது நேரம் அவளைப் பார்த்தார். பிறகு மெதுவாக சிரித்தார்.
“இது உன் நலனுக்குத்தான் மா…”
என்று கூறி மாத்திரையையும் தண்ணீரையும் அவளிடம் நீட்டினார்.
வேறு வழியில்லாமல், அவளும் மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டாள்.
“எதுவும் யோசிக்காமல்… நிம்மதியாக தூங்கு.”
அவர் அவளின் தலையை மெதுவாகத் தொட்டு, அறையின் விளக்கை மங்கலாக்கிவிட்டு வெளியேறினார்.
கதவு மெதுவாக மூடிய சத்தம் கேட்டது.
சில நொடிகள்— அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள்.
பிறகு…
அவர் சென்றுவிட்டதை உறுதி செய்தவள், மெதுவாக வாயைத் திறந்தாள்.
அவள் விழுங்கியதாக நடித்த மாத்திரை… இன்னும் அவள் நாக்கின் கீழே இருந்தது.
அதை எடுத்தவள், அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டு விட்டாள்.
அவளின் முகத்தில் இருந்த பயம் மெதுவாக மாறியது.
அதற்கு பதிலாக— ஒரு சந்தேகம். ஒரு பதற்றம்.
“ஏன்… தினமும் இந்த மருந்து…?”
அவள் மெதுவாகப் புலம்பினாள்.
அறை முழுவதும் அமைதி.
மழை பெய்து நின்றதால் ஜன்னல் கண்ணாடியில் நீர்த்துளிகள் வழிந்தன. அவள் மெதுவாக எழுந்து ஜன்னல் அருகே சென்றாள்.
வெளியில் இரவு காற்று வீசியது. தொலைவில் மரங்கள் அசைந்தன.
அந்த குளிர்ந்த காற்றை சுவாசித்தவள், சில நொடிகள் கண்களை மூடி நின்றாள்.
அப்போது—
திடீரென கீழே இருந்து பேச்சு சத்தம் கேட்டது.
அவள் புருவம் சுருக்கி மெதுவாக ஜன்னல் வழியாக கீழே பார்த்தாள்.
வீட்டின் பின்புறத்தில் இருவர் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அதில் ஒருவன் போனில் பேசிக்கொண்டிருந்தான்.
“Boss… மருந்து correct-ah கொடுத்து கொண்டு இருக்கோம்…”
அவளின் இதயம் வேகமாகத் துடித்தது.
அவன் மீண்டும் மெதுவாகச் சொன்னான்—
“Madam-க்கு ஞாபகம் எப்ப வேண்டுமானாலும் வரலாம்… அது வரை காத்துட்டு இருப்போம் boss…”
அவளின் முகம் வெளிறிப் போனது.
“ஞாபகம்…?”
அவள் மெதுவாக கிசுகிசுத்தாள்.
அந்த நொடி— அவளின் தலைக்குள் மின்னல் போல ஒரு காட்சி.
இருள்… ரத்தம்… ஒரு கத்தல்…
பிறகு—
ஒரு ஆண் குரல்.
“Maya… ஓடு!” 👁️
அவள் அதிர்ச்சியில் பின்னோக்கி நகர்ந்தாள்…
தொடரும்…
கருத்துகள்
கருத்துரையிடுக