“நினைவிருக்கா..???
பாகம் - 1
"மழை நின்ற பிறகும் ஈரமாக மின்னிய தரை…
தொலைவில் ஒரு தெரு விளக்கின் மங்கலான ஒளி மட்டும்.
அந்த ஒளியை நோக்கி உயிர் பிழைக்க ஓடிக்கொண்டிருந்தாள். அவளின் கைகள் நடுங்கின. முகம் முழுவதும் இரத்தக் கறைகள். யாரோ கொடூரமாக தாக்கிச் சென்ற தடயங்கள் உடல் முழுவதும் பதிந்திருந்தன. பின்னால் காலடி சத்தம். அவள் திரும்பிப் பார்க்கவில்லை. பார்க்கத் துணியவும் இல்லை.
“இன்னும் கொஞ்சம் தூரம்…”
மூச்சை இழுத்துக்கொண்டு வேகமாக ஓடினாள்.
திடீரென—
பளீச்!
ஒரு காரின் வெளிச்சம் நேராக அவள் முகத்தில் விழுந்தது. கண்கள் கூசின. அடி தவறியது. அவள் சாலையில் சரிந்து விழுந்தாள். மயக்கம் மெதுவாக அவளை இழுத்துக்கொண்டது. அப்போது… தொலைவில் இருந்து ஒரு ஆண் குரல்.
“… can you hear me…?”
அந்த குரல் மெதுவாக அருகே வந்தது
.
“Please… காப்பாத்துங்க…”
அவள் கண்களை திறக்க முயன்றாள். மங்கலாக ஒரு மனித உருவம் மட்டும் தெரிந்தது.
“ காப்பாத்துங்கா…?”
அவளின் உதடு மெதுவாக அசைந்தது. அடுத்த நொடி— அவள் முழுமையாக மயங்கிவிழுந்தாள்.
திடீரென—
அவள் கண் விழித்தாள். மூச்சு வேகமாக ஓடியது. உடல் முழுவதும் வியர்வை. இதயம் கட்டுப்பாடின்றி துடித்தது. அவள் சுற்றி பார்த்தாள். இது… ஒரு அறை. மங்கலான மஞ்சள் விளக்கொளி. ஜன்னலின் வெளியே மழை சத்தம். அறை முழுவதும் ஒரு அசாதாரண அமைதி.
“இது எங்கே…?”
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த சாலை… அந்த குரல்… அந்த முகம்…
எல்லாமே கனவா?
அல்லது நினைவா?
அவள் நடுங்கும் கைகளை பார்த்துக்கொண்டிருந்தபோது— அவள் அருகில் இருந்து ஒரு வயதான ஆண் குரல்.
“மீண்டும் அதே கனவா?”
கருத்துகள்
கருத்துரையிடுக